இந்தியாவில் கியா நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான EV6 GT Line ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு ரூ.65.90 லட்சம் விலையில் 84Kwh NMC பேட்டரி கொண்ட மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள AWD 325hp மற்றும் 605Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 663 கிமீ (ARAI) ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.3 நொடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுகின்றது.
10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 350kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், பேட்டரியை 18 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும், அதே நேரத்தில் 50kW DC சார்ஜர் மூலம் 73 நிமிடங்கள் ஆகும்.
19 அங்குல அலாய் வீல் பெற்று புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் சிறிய அளவிலான பம்பர் டிசைன் மாற்றங்களை பெற்றதாக அமைந்துள்ளது. இன்டீரியரில் இரண்டு 12.3 அங்குல டிஸ்பிளே வழங்கப்பட்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, காற்றோட்டமான முன் இருக்கைகள், 14-ஸ்பீக்கர் மெரிடியன் ஒலி அமைப்பு, வாகனத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுக்க (V2L) மற்றும் வாகனத்திலிருந்து வாகனத்திற்கு (V2V) சார்ஜிங் மற்றும் ஓவர்-தி-ஏர் (OTA) மென்பொருள் அப்டேட் வழங்கப்படுகின்றது.
முந்தைய மாடலை விட மிக சிறப்பான வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த லெவல்-2 ADAS நுட்பங்களுடன் ஏபிஎஸ், இஎஸ்சி, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எட்டு ஏர்பேக்குகள் பெற்றதாக அமைந்துள்ளது.
ஸ்னோ ஒயிட் பேர்ல், அரோரா பிளாக் பேர்ல், வுல்ஃப் கிரே, ரன்வே ரெட் மற்றும் யாட்ச் ப்ளூ மேட் என ஐந்து விதமான நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது.