Categories: Car News

விரைவில்., கியாவின் கேரன்ஸ், கேரன்ஸ் இவி விற்பனைக்கு வெளியாகிறதா.?

2025 kia carens ev and carens launch soon

இந்தியாவின் பிரசத்தி பெற்ற கியா இந்தியா நிறுவனத்தின் கேரன்ஸ் எம்பிவி காரின் 2025 ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்லி்ப்ட் உடன் கூடுதலாக எலக்ட்ரிக் பவர்டிரையின் பெற்ற கேரன்ஸ் மாடலும் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேரன்ஸ் எம்பிவி என்னென்ன வசதிகளுடன் வரலாம்.!

2025 வருடத்திற்கான கேரன்ஸ் காரின் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் முன்புறத்திலும், பின்புறத்தில் உள்ள டிசைன் அமைப்பில் பெரிதாக மாற்றங்களை பெற்றிருப்பதுடன், புதிய எல்இடி விளக்குகளை பெற்றிருக்கலாம், கூடுதலாக அலாய் வீல் டிசைன் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்.

இன்டீரியரில் குறிப்பாக சமீபத்தில் வெளியான சிரோஸ் காரில் இடம்பெற்றிருப்பதனை போன்ற 30 அங்குல டிரின்ட்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றுது.

விற்பனைக்கு புதிய கியா கேரன்ஸ் விலை ரூ.11 லட்சம் முதல் துவங்கி ரூ.21 லட்சத்துக்குள் அமைவதுடன் பல்வேறு நவீனத்துவமான பாதுகாப்புடன் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சந்தையில் கிடைக்கலாம்.

கேரன்ஸ் எலக்ட்ரிக் எம்பிவி ரேஞ்ச் மற்றும் பேட்டரி விபரம்.!

சமீபத்தில் வெளியான ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எலக்ட்ரிக் காரில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷனை பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் விலை ரூ.18 லட்சம் முதல் கேரன்ஸ் இவி விலை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும்  வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 350-400கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து, 51.4 kWh பேட்டரி 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 450-500கிமீ வழங்கலாம்.

கியா கேரன்ஸ் இவி விற்பனைக்கு அடுத்த மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குள் சந்தையில் கிடைக்கலாம்.

Share
Published by
நிவின் கார்த்தி
Tags: Kia Carens