ஹூண்டாய் நிறுவனத்தின் 6 மற்றும் 7 இருக்கை பெற்ற அல்கசார் எஸ்யூவி மாடலின் Prestige, Platinum, மற்றும் Signature வேரியண்டுகளுக்கு வயர்டு வசதிக்கு மாற்றாக பிரத்தியேக அடாப்டர் வழங்கப்பட்டுள்ளதால் வயர்லெஸ் முறையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள அடாப்டரினை யூஎஸ்பி போர்ட்டில் இணைத்தாலே தானாகவே வயர்டு இணைப்பு வயர்லெஸ் முறைக்கு மாற்றப்பட்டு விடும், இதற்கு வேறு எவ்விதமான கூடுதல் செட்டப் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது.
காரில் பயனர்களுக்கு உயர்தரமான அனுபவத்தினை ஏற்படுத்த இப்போது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவால் ஆதரிக்கப்படும் தங்கள் மொபைல் மூலம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பெற்றுக் கொள்வதனால் ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தின் உள்ளமைக்கப்பட்ட அமைப்பு மூலம் நேவிகேஷன், இசையை ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தவும் முடியும்.
புதிய நுட்பத்தை பெற்ற ஹூண்டாய் அல்கசார் பிரீஸ்டீஜ் வேரியண்ட் ஆரம்ப விலை ரூ.17,21,700 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த மாடலில் 1.5 டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் என இரு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது. இந்த அடாப்டரின் விலை ரூ.3,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அல்கசார் காரில் உள்ள 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160PS பவர் மற்றும் 253Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT கியர் பாக்ஸ் ஆனது இடம் பெற்று இருக்கின்றது.
அடுத்து, 1.5 லிட்டர் U2 CRDi டீசல் எஞ்சின் 116PS பவர் மற்றும் 250NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது.