புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி அடிப்படையிலான பிளாக் எடிசன் மற்றும் பிளாக் சிக்னேச்சர் எடிசன் என இரண்டிலும் மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல் வெளிப்புறத்தில், இன்டீரியரும் முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஏற்கனவே 2025 எலிவேட் ரூ.20,000 வரை V, VX மற்றும் ZX வேரியண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், தற்பொழுது ரூ.11.69 லட்சம் முதல் துவங்குகின்றது.
(EX-showroom)
எலிவேட்டின் பிளாக் எடிசன் மாடலில் முழுமையான கருமை நிறம் வெளிப்புறம் மற்றும் இண்டீரியரில் கொடுக்கப்பட்டாலும், பக்கவாட்டில் உள்ள கதவு பேனல், மேற்கூறை ரூஃப் ரெயில்களில் சில்வர் நிறம் உள்ளது.
டாப் மாடலாக அமைந்துள்ள பிளாக் சிக்னேச்சர் எடிசனில் முழுமையாக கருப்பு நிறம் கொடுக்கப்பட்டு 7 விதமான வண்ணங்களை வெளிப்படுத்தும் ஆம்பியண்ட் விளக்குகளை கொண்டிருக்கின்றது.
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடலில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4300 rpm-ல் 121hp பவர், 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான பவர்டிரையின் கிடைக்கின்றது.
இந்த சந்தையில் கிடைக்கின்ற அனைத்து போட்டியாளர்களும் ஏற்கனவே கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சில சிறப்பு மாடல்களை விற்பனை செய்து வருகின்றனர்.