வரும் டிசம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹோண்டா அமேஸ் காரின் டிசைன் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், வெளிப்புற தோற்றம் மற்றும் டிசைன் மாற்றங்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் விற்பனையில் கிடைக்கின்ற சிவிக் காரை அடிப்படையாக கொண்டாலும் மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.
புதிய அமேஸ் காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்க உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை இந்த முறை எதிர்பார்க்கலாம்.
தாய்லாந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிசைனில் மிக நேர்த்தியான தேன்கூடு கிரில் வழங்கப்பட்டு எல்இடி புராஜெக்டர் விளக்கு உள்ளது. மற்றபடி பக்கவாட்டு தோற்றத்தில் தற்பொழுது உள்ள மாடலில் இருந்து சிறிய மாறுபாடுகளுடன், இன்டீரியர் தொடர்பான டீசரில் மிதக்கும் வகையிலான டிஜிட்டல் இன்ஃபோடையின்மெண்ட் சிஸ்டம் பெற்று மிக எளிமையான அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.
புதிய அமேஸ் காருக்கு போட்டியாக சுசூகி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.