ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை அமேஸ் காரில் ADAS நுட்பத்துடன் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.10.89 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மேம்பாடுகளை பெற்று உயர் கட்டுமானத்தை வெளிப்படுத்துவதுடன் 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- ஹோண்டா அமேசில் 1.2 லிட்டர் எஞ்சின் 90hp மற்றும் 110Nm டார்க் வழங்கும்.
- இந்தியாவின் குறைந்த விலையில் ADAS பெறுகின்ற மாடலாக அமேஸ் உள்ளது.
- V, VX, ZX என மூன்றிலும் சிவிடி/எம்டி என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.
அமேஸ் டிசைன்
மூன்றாவது தலைமுறை அமேஸ் செடானில் பல்வேறு நவீனத்துவமான வசதிகள் மற்றும் உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ள நிலையில் வெள்ளை, கிரே, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் பிரவுன் ஆறு விதமான நிறங்கள் பெற்று ஸ்டைலிங் அமைப்பில் முன்பாக விற்பனையில் உள்ள எலிவேட் மற்றும் சிட்டி கார்களில் இருந்து பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கின்றது.
172 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற மாடலில் 416 லிட்டர் பூட்ஸ்பேஸ் பெற்று 2470 மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கிரிலுடன் ஒருங்கிணைந்த LED ரன்னிங் விளக்குடன் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பனி விளக்குகள் கொண்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் பக்கவாட்டில் பெற்றாலும், வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல், பின்புறத்தில் எல்இடி உடன் கூடிய டெயில் லைட் பெற்றுள்ளது.
அமேஸ் இன்டீரியர்
இன்டீரியர் அமைப்பில் மிதக்கும் வகையிலான 8 அங்குல டிஜிட்டல் இன்ஃபோடையின்மெண்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு கொண்டுள்ள நிலையில், செமி டிஜிட்டல் முறையிலான 7 அங்குல கிளஸ்ட்டரை அனைத்து வேரியண்டிலும் பொதுவாக மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பின்புறத்தில் ஏசி வென்ட்கள் பெற்றுள்ளது. இந்த இன்டீரியர் முன்பாக வந்த எலிவேட் போல அமைந்திருந்தாலும் சில்வர் இன்ஷர்ட் உடன் கருப்பு மற்றும் பழுப்பு தீம் நிறங்களில் மாறுபடுகின்றது.
எஞ்சின் விபரம்
1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.
2025 அமேஸ் பெட்ரோல் மேனுவல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 18.65 கிமீ ஆகவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 19.46 கிமீ தரும் என கூறப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
அமேஸ் காரின் பாதுகாப்பு சார்ந்த ஆறு ஏர்பேக்குகள் உடன் லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ESC மற்றும் ஹோண்டா சென்சிங் ADAS தொகுப்பு கொண்டுள்ளது.
ஹோண்டா அமேஸ் விலை பட்டியல்
- Amaze V 1.2L MT – ₹ 7,99,900
- Amaze VX 1.2L MT – ₹ 9,09,900
- Amaze ZX 1.2L MT – ₹ 9,69,900
- Amaze V 1.2L CVT – ₹ 9,19,900
- Amaze VX 1.2L CVT – ₹ 9,99,900
- Amaze ZX 1.2L CVT – ₹ 10,89,900
(Ex-showroom)
2025 Amaze photo gallery