டொயோட்டா நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட புதிய ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்கப் டிரக் மைல்டு ஹைபிரிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய சந்தைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.
ஐரோப்பா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெலக்ஸ் பிக்கப் டிரக்கின் தோற்ற அமைப்பில் இருந்த மாறுபட்ட கிரில் உட்பட பல்வேறு சிறிய மாற்றங்களை கொண்டுள்ளது.
2024 Toyota Hilux
முதற்கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா சந்தையில் கிடைக்க உள்ள புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் அறுகோண வடிவ கிரிலை பெற்று புதிய இன்ஷர்ட்களை கொண்டதாகவும் பளபளப்பான கருமை நிறத்தை பெற்று நேர்த்தியான லேம்ப் பிசல்ஸ் மற்றும் புதிய எல்இடி ஹெட்லேம்ப் கொண்டிருக்கின்றது.
பெரிய அளவில் இன்டிரியர் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் சில வசதிகள் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
7.6 கிலோ எடை கொண்டுள்ள 48V லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய் சிறிய மோட்டார் ஜெனரேட்டரை பெற்று தானாகவே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளும் பொழுது பேட்டரி 16 hp (12 kW) பவர், 65 Nm டார்க் வழங்குகின்றது. 2.8-லிட்டர் டீசல் என்ஜின் DOHC, 16 வால்வு பெற்றது 3,400rpm-ல் 204 hp (150 கிலோவாட்) பவர் மற்றும் 1,600 முதல் 2,800 rpm-ல் 500Nm டார்க் வழங்குகின்றது.
இந்திய சந்தைக்கு புதிய டொயோட்டா ஹைலக்ஸ் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாகலாம்.