வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஸ்கோடா ஆக்டேவியா செடானின் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய விபரங்கள் காரின் தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது.
முன்பாக விற்பனையில் இந்திய சந்தையில் கிடைத்து வந்த சில ஆண்டுகளாக நீக்கப்பட்ட நிலையில் ஆக்டேவியா விற்பனைக்கு நடப்பு ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது.
2024 Skoda Octavia
ஸ்கோடாவின் சூப்பர்ப் மற்றும் கோடியாக் கார்களில் இடம்பெற்ற வடிவமைப்பினை அடிப்படையாக பெற்று 2024 ஆக்டேவியா காரின் முன்பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் புதிய எல்இடி மேட்ரிக்ஸ் பீம் ஹெட்லைட் உடன் பம்பர் மாற்றப்பட்டு கூர்மையான வடிவத்தை கொண்டுள்ள இந்த மாடல் பக்கவாட்டில் புதிய அலாய் வீல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகளுடன் வரவுள்ளது.
ஆக்டேவியா மாடலில் 110hp, 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைபிரிட் பெற்ற 150hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தொடர்ந்து பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, 245hp, 1.4 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெறலாம்.
ஆக்டேவியா செடானில் ஸ்போர்ட்லைன் மற்றும் RS மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வருவதனை ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது.