இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரின் பிரபலமான மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் காரினை 2023 ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் மற்றும் என்ஜின் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
காட்சிப்படுத்தப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் காரில் புதிய மூன்று சிலிண்டர் ஹைபிரிட் என்ஜின், ADAS பாதுகாப்பு தொகுப்பு, சிவிடி கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை உற்பத்தி நிலைக்கு பெற உள்ளது.
2024 Maruti Suzuki Swift
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரில் தற்பொழுது 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் நீக்கப்பட்டு புதிதாக Z சீரிஸ் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மிக வலுவான ஹைபிரிட் என்ஜின் பெற உள்ளது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பெற என இரு ஆப்ஷனையும் பெற உள்ளது.
சிறப்பான மைலேஜ் தரக்கூடியதாக வரவுள்ள 2024 மாருதி ஸ்விஃப்ட் காரின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகவில்லை.
புதிய மாருதி ஸ்விஃப்ட் தலைமுறை காரின் பரிமாணங்கள் ஒட்டுமொத்த நீளம் 3860 மிமீ, அகலம் 1735மிமீ மற்றும் உயரம் 1500மிமீ ஆகும் முக்கியமான வீல்பேஸ் மாற்றமில்லாமல் தொடர்ந்து 2450 மிமீ ஆக உள்ளது. மாற்றங்களை பொறுத்தவரை, ஒட்டுமொத்த நீளத்தில் 15 மிமீ நீளமாகவும், உயரத்தில் 30 மிமீ குறைவாகவும், அகலத்தின் அடிப்படையில் 40 மிமீ குறைவாகவும் உள்ளது.
சுசூகி ஸ்விஃப்ட் காரின் வெளிப்புற தோற்ற வடிவமைப்பினை பொறுத்தவரை, தற்பொழுதுள்ள மாடலின் அடிப்படையான டிசைனில் பெரிய மாற்றமில்லை. ஆனால் பல்வேறு சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை கொடுத்துள்ளது. தேன்கூடு வடிவத்துடன் கூடிய புதிய கிரில் மற்றும் சுஸுகி லோகோ கீழ் பகுதியில் முன்பக்க கேமராவும் உள்ளது. புதிய பம்பர் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது.
ஸ்விஃப்ட் காரில் புதிய எல்இடி டெயில் விளக்குகளில் தலைகீழ் சி-வடிவ பாணி டெயில் விளக்குகள் மற்றும் ஒட்டுமொத்த டெயில் விளக்குகள் வெளிப்படையான கண்ணாடியை கொண்டுள்ளது.
சுசூகி ஸ்விஃப்ட் காரின் இன்டிரியரில் கருப்பு மற்றும் வெள்ளை என இரட்டை நிறத்தை பெற்ற புதிய டாஷ்போர்டு அமைப்பைப் பெறுகிறது.இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான புதிய கிராபிக்ஸ் உடன் ஏசி கண்ட்ரோல் பேனலும் புதியதாகத் தோன்றுகிறது.
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறக்கூடிய புதிய 9.0 இன்ச் தொடுதிரை நிற்கும் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், இப்போது காற்றோட்டமான இருக்கைகள், ADAS, 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் சுசூகி 6-ஏர்பேக்குகள் வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் கிடைக்கும்.