இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது குறிப்பாக ஒற்றை Limousine+ வேரியண்ட் மட்டும் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு துவங்கப்பட்ட 18 நாட்களில் தற்பொழுது வரை 2,796 முன்பதிவுகளை கடந்துள்ளது.
முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் இன்டீரியரிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டு இருக்கின்றது. குறிப்பாக தற்பொழுது வந்துள்ள மாடல் வெள்ளை மற்றும் கருப்பு என இரு நிறங்கள் மட்டும் இந்திய சந்தையில் பெறுகின்றது.
197bhp மற்றும் 440Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
2+2+3 என 7 இருக்கை பெற்றுள்ள கார்னிவல் Limousine+ மாடலில் இரண்டு சன்ரூஃப், 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS பெற்றிருக்கின்ற நிலையில், 27 விதமான ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் இந்த மாடலுக்கான நேரடியான போட்டிகள் இல்லை என்றாலும் இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா வெல்ஃபயர் காரும் கடுமையான சவாலினை ஏற்படுத்தும்.