ரூ.9.98 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள 2024 எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரில் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட்டு மற்றும் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
கிரெட்டா, கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், செல்டோஸ், எலிவேட் உள்ளிட்ட எஸ்யூவிகளுடன் சி3 ஏர்கிராஸ் ஃபோக்ஸ்வேகன் டைகன், குஷாக் ஆகியவற்றை ஆஸ்டர் எஸ்யூவி எதிர்கொள்ளுகின்றது.
2024 MG Astor
இரு விதமான என்ஜினை பெறும் எம்ஜி ஆஸ்டரில் 110 hp பவர் மற்றும் 150 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 hp பவர் மற்றும் 220 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கின்றது.
i-SMART 2.0 பயனர் இடைமுகத்தை பெறுகின்ற 10.1 அங்குல இன்ஃபோடெயின்மெட் சிஸ்டத்தில் 80க்கு மேற்பட்ட கனெக்ட்டிவ் வசதிகளுடன் ஜியோ-இயங்கும் குரல் அங்கீகார அமைப்பு மற்றும் திருட்டு தடுக்கும் அம்சத்துடன் டிஜிட்டல் கீ செயல்பாடு போன்றவை உள்ளது.
கூடுதல் வசதிகளில் முன்புறத்தில் காற்றோட்டமான இருக்கை, வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவற்றை புதிய ஸ்பிரிண்ட் வேரியண்ட் பெறுகின்றது.
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம், ரியர் டிரைவ் அசிஸ்ட், அறிவார்ந்த ஹெட்லேம்ப் வசதி மற்றும் ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் உட்பட 14 இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு தொகுப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.
2024 MG Astor price list
VARIANT | 1.5 PETROL MT | 1.5 PETROL AT | 1.3 TURBO PETROL AT |
SPRINT | ₹ 9,98,000 | – | – |
SHINE | ₹ 11,68,000 | – | – |
SELECT | ₹ 12,98,000 | ₹ 13,98,000 | – |
SHARP PRO | ₹ 14,40,000 | ₹ 15,68,000 | – |
SAVVY PRO | – | ₹ 16,68,000 | ₹ 17,98,000 |
கூடுதலாக டூயல் டோன் பெற்ற வேரியண்டுகள் விலை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக ரூ.20,000 வசூலிக்கப்படுகின்றது.
டூயல் டோன் ஒயிட் மற்றும் பிளாக், ஹவானா கிரே, அரோரா சில்வர், கிளேஸ் ரெட், கேண்டி ஒயிட் மற்றும் ஸ்டாரி பிளாக் நிற விருப்பங்களை கொண்டு உட்புற டிரிம் வண்ண விருப்பங்களில் டூயல் டோன் ஐகானிக் ஐவரி, டக்செடோ பிளாக் மற்றும் டூயல் டோன் சாங்க்ரியா ரெட் என மூன்று விதமாக வேரியண்டை பொறுத்து கிடைக்கின்றது.