இந்தியாவின் முன்னணி ஆடம்ப வாகன தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய GLS எஸ்யூவி மாடலை ரூ.1.32 கோடியில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. புதிய ஜிஎல்எஸ் காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டு ஆப்ஷனிலும் வரவுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 17,408 கார்களை விற்பனை செய்த மெர்சிடிஸ்-பென்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டை விட 10 % வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 12க்கு மேற்பட்ட கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில் இதில் 3 எலக்ட்ரிக் கார்களும் வெளிவரவுள்ளது.
2024 Mercedes Benz GLS Facelift
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் உள்ள இரண்டு என்ஜின்களும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்று புதிய GLS 450 4Matic வேரியண்டில் 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 381hp மற்றும் 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
GLS 400d 4Matic 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 367hp மற்றும் 700Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரில் பொதுவாக 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேட்டிக் AWD அமைப்பு ஆகியவை GLS காரில் பெற்றுள்ளது.
5.2 மீட்டர் நீளம் பெற்றுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் GLS காரில் 21 அங்குல அலாய் வீல் பெற்று 5 விதமான நிறங்களை கொண்டு இன்டிரியர் அமைப்பில் MBUX வசதிகளை பெற்று உறுதியான கட்டுமானத்தை கொண்ட காராக விளங்குகின்றது.
- Mercedes-Benz GLS 450- ₹1.32 கோடி
- Mercedes-Benz GLS 450d- ₹1.37 கோடி
2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLS காருக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ X7, ஆடி Q7 மற்றும் வால்வோ XC90 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.