2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ்-பென்ஸ் GLA ஃபேஸ்லிஃபட் எஸ்யூவி ரூ.50.50 லட்சம் முதல் ரூ. 56.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுள்ளது. முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.
கிராஸ்ஓவர் ஸ்டைல் பெற்ற மாடலில் GLA 200, GLA 220d 4MATIC மற்றும் GLA 220d 4MATIC AMG லைன் என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 163 bhp, 250 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் DCT டிரான்ஸ்மிஷன் உள்ளது. அடுத்து, 2.0-லிட்டர் டீசல் என்ஜின் 193 bhp, 400 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலில் இருந்து புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் , புதிய GLA திருத்தப்பட்ட கிரில், முன்பக்க பம்பரில் வித்தியாசமான வடிவிலான ஏர் இன்டேக் மற்றும் அலாய் வீல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இரட்டை 10.25 அங்குல டிஸ்பிளே பெற்ற கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மேம்பட்ட டேஸ்போர்டில் ஏஎம்ஜி வேரியண்டுகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட ஸ்டைலிஷான அம்சங்கள் உள்ளன. மேலும், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, கீலெஸ்-கோ கம்ஃபோர்ட் பேக்கேஜ் மற்றும் சமீபத்திய தலைமுறை MBUX NTG7 மென்பொருள் மேம்பாடு உள்ளது.
- Mercedes-Benz GLA 200 – ரூ. 50.50 லட்சம்
- Mercedes-Benz GLA 220d 4MATIC – ரூ. 54.75 லட்சம்
- Mercedes-Benz GLA 220d 4MATIC AMG Line – ரூ. 56.90 லட்சம்
இந்திய சந்தையில் விற்பனையில் பிஎம்டபிள்யூ X1, ஆடி Q3 மற்றும் வால்வோ XC40 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.