மாருதி சுசூகி நிறுவனத்தின் நான்காம் தலைமுறை டிசையர் மற்றும் மூன்றாம் தலைமுறை டிசையர் என இரண்டு மாடல்களை சர்வதேச கிராஷ் டெஸ்ட் (Global NCAP) மையத்தால் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய டிசையர் 5 ஸ்டாரும், பழைய டிசையர் 2 ஸ்டாரும் பெற்றுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024 புதிய டிசையர் vs பழைய டிசையர்
விற்பனைக்கு வரவுள்ள புதிய டிசையர் மாடல் வயது வந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில் வயது வந்தோர் பாதுகாப்பில் பழைய டிசையருக்கு 34 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் பழைய டிசையர் வெறும் 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் புதிய 5 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது.
குறிப்பாக 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள 2024 மாடலின் எடை 1153 கிலோ கொண்டுள்ளது. ஆனால் பழைய டிசையரின் 2 ஏர்பேக்குகளுடன் எடை 1098 கிலோ உள்ளது. 55 கிலோ கூடுதலாக உள்ள காரணமே ஸ்டீல் டென்சில் வலிமை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம்பிள் ஜோன் போன்றவற்றின் கட்டுமானம் பலப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 64 கிமீ வேகத்தில் மோதும் பொழுது பழைய டிசையரின் ஃபூட்வால் பகுதி நிலையற்றதாக, பாடிஷெல் நிலையற்றது என மதிப்பிடப்பட்டு கூடுதல் வேக தாக்குதலை தாங்கும் திறன் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 2024 டிசையரின் ஃபூட்வால் பகுதி நிலையானதாக, பாடிஷெல் நிலையானது என மதிப்பிடப்பட்டு கூடுதல் வேக தாக்குதலை தாங்கும் திறன் கொண்டிருப்பதாக GNCAP அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டிசையர் மாடல் குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 39.20 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் பழைய டிசையருக்கு புள்ளிகளுக்கு 24.5 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் பழைய டிசையர் வெறும் 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் புதிய டிசையர் குழந்தை பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது.
பழைய டிசையர் தொடர்ந்து வணிகரீதியான பயன்பாடுகளுக்கு டூர் எஸ் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய டிசையர் நவம்பர் 11 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.