ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் இந்தியாவின் புதிய கிரெட்டா எஸ்யூவி மாடலின் டிசைன் படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முழுமையாக வடிவமைப்பு வெளியாகியுள்ளது.
கிரெட்டாவில் 1.5 லிட்டர் Mpi பெட்ரோல், 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டதாக வரவிருக்கின்றது.
2024 Hyundai Creta Design Sketches
இந்தியாவின் மிக அதிகப்படியான வரவேற்பினை பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றான கிரெட்டா எஸ்யூவி காரின் டிசைன் படங்கள் மூலம் முன்புற கிரில் அமைப்பில் மிக நேர்த்தியான கிடைமட்டமான முன்புற கிரிலுடன், இரு வண்ண கலவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பம்பருடன் கூடுதலாக ஸ்கிட் பிளேட் இணைக்கப்பட்டு, எல்இடி லைட் பார் கொடுக்கப்பட்டு புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் செவ்வக வடிவத்திலான எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அமைந்துள்ளது.
புதிய கிரெட்டா எஸ்யூவி பின்பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பரில் இரு வண்ண கலவை கொண்டதாகவும், எல்இடி டெயில் லைட், எல்இடி பார் லைட் உள்ளது. பம்பரில் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு கூடுதல் கவனத்தை பெறுகின்றது.
இன்டிரியர் தொடர்பான படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இரண்டு 10.25 அங்குல டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளதால் மிகவும் நேர்த்தியான இரண்டு ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீல் பெற்றதாக அமைந்திருக்கின்றது. 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடு திரை வசதி மூலம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றுடன் வயர்லெஸ் சார்ஜிங் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளில் 70க்கு மேற்பட்ட அம்சங்கள் இடம்பெறலாம்.
2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் பெற்று ஆறு விதமான ஒற்றை நிறம் மற்றும் ஒரு டூயல்-டோன் விருப்பத்தை பெற்றிருக்கும். தற்பொழுது கிரெட்டா காருக்கான முன்பதிவு நடைபெற்று ரூ.25,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது.