கிரெட்டாவின் காரின் தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்டு கிரில் மற்றும் மிக நேர்த்தியான புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ளது.
115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்த என்ஜின் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
கூடுதலாக, 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட நிறத்தை பெற உள்ள டேஸ்போர்டில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும். இரண்டு பிரிவு திரை அமைப்பினை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் ஆகியவற்றை பெற உள்ளது.
வாகனத்தின் ஸ்டெபிளிட்டி கண்டரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா வியூ, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் பெற உள்ள ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவது உறுதியாகியுள்ளது.