ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா எஸ்யூவி காரை 16 ஜனவரி 2024 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் டீலர்களுக்கு அனுப்ப துவங்கியுள்ளதால் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வகையில் இன்டிரியர் தொடர்பான படங்களும் கிடைத்துள்ளது.
இந்திய சந்தையில் 8 ஆண்டுகளாக கிரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்று லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
2024 Hyundai Creta interior
2024 ஆம் ஆண்டிற்கான கிரெட்டா மாடல் தொடர்பான இன்டிரியர் படங்களை அதிகார்ப்பூர்வமாக ஹூண்டாய் வெளியிட்டிருந்த பொழுதும் புதிய கார்கள் டீலர்களை வந்தடைந்துள்ளதை தொடர்ந்து சில படங்கள் கிடைத்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரில் இரண்டு பிரிவுகளை கொண்ட 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெறுவதன் மூலம் 70க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவற்றுடன் தொடும் வகையிலான HVAC சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளது.
செல்டோஸ் காரில் உள்ள வசதிகளுடன் போட்டியாக க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில் இரட்டை மண்டல ஏசி கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள் மற்றும் 8-வழி அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றைப் பெறும்.
2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள் உட்பட19 வசதிகளை பெற்ற லெவல் 2 ADAS பாதுகாப்பினை தொகுப்பு, 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு அமைப்பு, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை பெற்றிருக்கும்.
இந்த காரில் E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் அடிப்படையில் 1.5 லிட்டர் Mpi பெட்ரோல், 160 hp பவர் வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டதாக வரவிருக்கின்றது.
image source – Deepak Binwal You tube