டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சஃபாரி எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ A, அக்காம்பலிஸ்டு மற்றும் அக்காம்பலிஸ்டு+ ஆகியவற்றுடன் கூடுதலாக டார்க் எடிசன் மாடலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
சஃபாரி எஸ்யூவி காரில் 3,750 rpm-ல் அதிகபட்சமாக 170 hp பவர் மற்றும் 1,750-2,500 rpm-ல் 350Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற சஃபாரி 16.30kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற சஃபாரி 14.50kmpl வெளிப்படுத்துகின்றது.
Tata Safari Smart (O)
2.0 லிட்டர் டீசல் MT என்ஜின் பெற உள்ள ஆரம்ப நிலையில் வேரியண்டில்,
- எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்
- கனெக்டேட் எல்இடி ரன்னிங் விளக்கு
- LED டெயில் விளக்கு
- மின்சாரம் சரிசெய்யக்கூடிய விங் மிரர்
- 17-இன்ச் அலாய் வீல்
- 6 ஏர்பேக்
- EBD உடன் ஏபிஎஸ்
- டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு
- பின்புற பார்க்கிங் சென்சார்
- ஒளிரும் லோகோவுடன் கூடிய ஸ்டீயரிங்
- ISOFIX குழந்தை இருக்கை
- ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்
- ESP
- ஹில் ஹோல்ட் வசதி
- டிராக்ஷன் கண்ட்ரோல்
- ரோல் ஓவர் தடுக்கும் அமைப்பு
- கார்னரிங் ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு
- பிரேக் டிஸ்க் துடைத்தல்
- பேனிக் பிரேக் அலர்ட்
- பவர் விண்டோஸ்
- முன் வரிசை உயரத்தை சரிசெய்யக்கூடிய சீட் பெல்ட்
- அனைத்து இருக்கைகளுக்கும் 3-புள்ளி சீட்பெல்ட் நினைவூட்டல் வசதி
- 2வது வரிசை 60:40 இருக்கைகள்
- 2வது மற்றும் 3வது வரிசை ஏசி வென்ட்கள்
- 50:50 பிரித்து 3வது வரிசை இருக்கைகள்
- ரூஃப் ரெயில்
- பாஸ் மோட்
- அனைத்து 3 வரிசைகளுக்கும் USB வகை-A மற்றும் Type-C சார்ஜர்கள்
Tata Safari Pure (O)
2.0 லிட்டர் டீசல் MT என்ஜின் பெற உள்ள நிலையில் ஸ்மார்ட் (ஆப்ஷனல்) வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக,
- 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
- 6 ஸ்பீக்கர்கள் (4 ஸ்பீக்கர் மற்றும் 2 ட்வீட்டர்)
- ரிவர்ஸ் கேமரா
- வாய்ஸ் கண்ட்ரோல் வசதி
- மின்சாரம் சரிசெய்யக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய விங் மிரர்
- OTA புதுப்பிப்பு
- ஷார்க் ஃபின் ஆண்டெனா
- முன் வரிசை USB-C 45W வேகமான சார்ஜர்
- பின்புற வாஷர் மற்றும் துடைப்பான்
- ரிமோட் சென்ட்ரல் லாக்கிங்
Tata Safari Adventure
2.0 லிட்டர் டீசல் MT என்ஜின் பெற உள்ள நிலையில் ப்யூர் (ஆப்ஷனல்) வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக,
- 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்
ஸ்டார்ட் பொத்தான் வசதி - டெர்ரயின் மோட் (Normal, Rough & Wet)
- டிரைவிங் மோட் (Eco, City & Sport)
- ஆம்பியன்ட் விளக்குகள்
- இடுப்புக்கு ஏற்ற வகையில் ஓட்டுநர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி
- கப்ஹோல்டர்களுடன் பின்புற ஆர்ம்ரெஸ்ட்
- முன்புறத்தில் எல்இடி மூடுபனி விளக்கு
- பின்புற டிஃபோகர்
- குளிர்ந்த சேமிப்பகத்துடன் முன் ஆர்ம்ரெஸ்ட்
- முகப்பு விளக்கில் ஃபாலோ மீ வசதி
- க்ரூஸ் கட்டுப்பாடு
Tata Safari Adventure+
2.0 லிட்டர் டீசல் MT / 2.0 லிட்டர் டீசல் AT என இரண்டிலும் கிடைக்க உள்ள நிலையில் அட்வென்ச்சர் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக,
- குரல்-உதவி பனோரமிக் சன்ரூஃப்
- 360 டிகிரி கேமரா
- ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
- வயர்லெஸ் சார்ஜர்
- பார்க்கிங் சென்சார்
- AQI டிஸ்ப்ளே கொண்ட காற்று சுத்திகரிப்பு
- மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்
- பேடல் ஷிஃப்டர் (AT மட்டும்)
Tata Safari Adventure+ A
2.0 லிட்டர் டீசல், MT / 2.0 லிட்டர் டீசல் AT என இரண்டிலும் கிடைக்க உள்ள நிலையில்
- ADAS தொகுப்பில் 11 விதமான அம்சங்கள்
- அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (AT)
Tata Safari Accomplished
2.0 லிட்டர் டீசல், MT / 2.0 லிட்டர் டீசல் AT என இரண்டிலும் கிடைக்க உள்ள நிலையில் அட்வென்ச்சர்+ வேரியண்டு வசதிகளுடன் கூடுதலாக,
- 19-இன்ச் டூயல்-டோன் டைமண்ட் கட் அலாய் வீல்
- 7 ஏர்பேக்
- சைகை மூலம் கட்டுப்படுத்தும் வகையில் பவர் டெயில்கேட்
- 12.3 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- குரல் உதவி இரட்டை மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
- பின்புறத்திலும் எல்இடி ரன்னிங் விளக்குகள்
- நினைவகம் மற்றும் வரவேற்பு செயல்பாடுகளுடன் 6-வழி இயங்கும் டிரைவர் இருக்கை
காற்றோட்டமான முன் இருக்கைகள் - 9 ஜேபிஎல் ஸ்பீக்கர் (4 ஸ்பீக்கர், 4 ட்வீட்டர் மற்றும் சப்வூஃபர்)
- ஆட்டோமேட்டிக் ரியர் வியூ கண்ணாடி
- பின்புற மூடுபனி விளக்கு
- முன்பக்கம் எல்இடி மூடுபனி விளக்கு, கார்னரிங் செயல்பாடு
- ஹில் டிசென்ட் கன்ட்ரோல்
- டிரைவர் டோஸ் ஆஃப் வசதியுடன் ESP
Tata Safari Accomplished+
2.0 லிட்டர் டீசல், MT / 2.0 லிட்டர் டீசல் AT என இரண்டிலும் கிடைக்க உள்ள நிலையில் அக்காம்பலிஸ்டு வேரியண்டு வசதிகளுடன் கூடுதலாக,
- ADAS தொகுப்பில் 11 விதமான அம்சங்கள்
- இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம்
- 10 ஜேபிஎல் ஸ்பீக்கர் (5 ஸ்பீக்கர், 4 ட்வீட்டர் மற்றும் சப்வூஃபர்)
- அவசர அழைப்பு மற்றும் பிரேக் டவுன் உதவி
- 2வது வரிசைக்கு காற்றோட்டமான இருக்கை (6 சீட்டர் மட்டும்)
Tata Safari Dark Edition
டார்க் எடிசன் எனப்படுவது கருமை நிறத்தை கொண்டுள்ள மாடல் 2.0 லிட்டர் டீசல், MT / 2.0 லிட்டர் டீசல் AT என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்று அட்வென்ச்சர்+, அக்காம்பலிஸ்டு மற்றும் அக்காம்பலிஸ்டு+ ஆகிய மூன்று வேரியண்டிலும் கிடைக்கின்றது.
- கருப்பு நிற இன்டிரியர்
- ஏரோ இன்செர்ட்டுகளுடன் கூடிய 19-இன்ச் டார்க் அலாய் வீல்
- ஓபரான் கருப்பு நிறம்
- டார்க் பதிப்பு பேட்ஜிங்
2023 டாடா சஃபாரி எஸ்யூவி காருக்கு போட்டியாக ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.