இந்தியாவின் BNCAP முதல் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியான நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன சஃபாரி மற்றும் ஹாரியர் எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. வயது வந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 30.8 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 44.54 புள்ளிகள் பெற்றுள்ளது.
முன்பாக டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி சர்வதேச GNCAP மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திரங்களை பெற்றிருந்தது.
BNCAP Tata Harrier/Safari
பாரத் கிராஷ் டெஸ்ட் மூலம் சோதனை செய்யப்பட்டுள்ள முதல் மாடலான டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் எஸ்யூவி வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி மாடல் லேண்ட் ரோவரின் D8 பிளாட்ஃபாரத்திலிருந்து பெறப்பட்ட OMEGARC அடிப்படையாகக் கொண்டுள்ள காரில் ஏழு ஏர்பேக்குகள், ESC, ABS உடன் EBD, VSM, HAC, HSC, ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், மூன்று-புள்ளி சீட் பெல்ட்கள், ISOFIX மவுண்ட்கள், சீட்பெல்ட் ரிட்ராக்டர் மற்றும் ப்ரீடென்ஷனர்கள், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைண்ட் -ஸ்பாட் மானிட்டர், மற்றும் இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்றது.
வயதுவந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 30.08 பெற்றுள்ள இரண்டு கார்களும் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து பாதுகாப்பிற்கு நன்றாக உள்ளது, அதே நேரத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் மார்புக்கு பாதுகாப்பு போதுமானதாகவும் உள்ளது.
பக்கவாட்டு போல் கிராஷ் டெஸ்ட் முறையில், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் 16 புள்ளிகளுக்கு 14.08 புள்ளிகள் பெற்று தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்புக்கு “நல்ல பாதுகாப்பை” கொண்டிருக்கின்றது. இந்த காரில் உள்ள பக்கவாட்டு ஏர்பேக் மோதலின் போது தலை மற்றும் இடுப்புக்கு நல்ல பாதுகாப்பையும், மார்புக்கு ஓரளவு பாதுகாப்பையும், வயிற்றுப் பகுதிக்கு போதுமான பாதுகாப்பையும் கொடுக்கின்றது.
பாரத் NCAP இரு கார்களிலும் 18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தைக்கு ஏற்ப டம்மிகளை பொருத்தி இருவரும் பின்நோக்கி அமர்ந்திருக்கும் நிலையில் சோதனை செய்கையில் 49 புள்ளிகளுக்கு 44.54 புள்ளிகளை பெற்று 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.