இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய 2023 ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.94.3 லட்சம் ஆகும். டைனமிக் HSE வேரியண்டில் மட்டும் வந்துள்ள மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
முந்தைய தலைமுறை வேலார் எஸ்யூவி 2,500 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது வந்துள்ள புதிய தலைமுறைக்கு 750க்கு மேற்பட்ட முன்பதிவுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
2023 Range Rover Velar SUV
ஜேஎல்ஆர் நிறுவனம் புதிய வேலார் எஸ்யூவி காரில் திருத்தப்பட்ட முன் பம்பர், புதுப்பிக்கப்பட்ட கிரில் போன்ற மாற்றங்களை செய்துள்ளது. புதிய அலாய் வீல் மற்றும் டெயில் விளக்குகளில் புதிய எல்இடி இன்டிகேட்டர் விளக்குகளை கொண்டுள்ளது. ‘பிக்சல் எல்இடி’ ஹெட்லைட் வழங்கப்படுகின்றன.
இன்டிரியரில் புதிய 11.4 இன்ச் பிவி ப்ரோ தொடுதிரை அமைப்பில் டிரைவிங் மோடுகள் மற்றும் பல போன்ற காரில் உள்ள செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
மற்றபடி கூடுதல் வசதிகளில், நான்கு-மண்டல கிளைமேட் கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா, வெப்பமூட்டும் மற்றும் காற்றோட்டம் செயல்பாடுகளுடன் இயங்கும் முன் இருக்கைகள், எலக்ட்ரிக் டெயில்கேட், ஒரு மெரிடியன் ஒலி அமைப்பு, டெரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 ஆஃப்-ரோடு முறைகள் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
2023 ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 246 bhp மற்றும் 365 Nm டார்க்கை வழங்குகின்றது. 201 bhp மற்றும் 420 Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் Ingenium டீசல் எஞ்சினிலும் கிடைக்கிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.