இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் கிடைக்கின்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் குரோ எடிசன் என இரண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரூ.6.00 லட்சம் முதல் ரூ.10.86 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் NA என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என இரண்டு என்ஜினை பெறுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது 5 வேக மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ், மற்றும் டர்போ மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
2023 Nissan Magnite on-Road Price
1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. தற்பொழுது இந்த என்ஜினில் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் வந்துள்ளது.
மேக்னைட் எஸ்யூவி காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மைலேஜ் 19.70kmpl ஆகவும், MT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 19.35kmpl ஆக ARAI-சான்றளித்துள்ளது.
NISSAN MAGNITE 1.0 L NA Price list | ||
---|---|---|
Trim | Ex-showroom Price | on-Road Price |
XE MT | ₹ 5,99,900 | ₹ 7,05,231 |
XL MT | ₹ 7,04,000 | ₹ 8,24,651 |
XV MT | ₹ 7,81,000 | ₹ 9,11,876 |
XV Premium MT | ₹ 8,59,000 | ₹ 9,99,321 |
XV Exec MT | ₹ 7,34,000 | ₹ 8,52,012 |
XE EZ-Shift | ₹ 6,49,900 | ₹ 7,56,068 |
XL EZ-Shift | ₹ 7,44,000 | ₹ 8,64,345 |
XV EZ-Shift | ₹ 8,21,000 | ₹ 9,54,098 |
XV Premium EZ-Shift | ₹ 8,89,500 | ₹ 10,32,560 |
Geza Edition | ₹ 7,39,000 | ₹ 8,64,876 |
Kuro Editon MT | ₹ 8,27,000 | ₹ 9,61,065 |
Kuro Editon EZ-Shift | ₹ 8,67,000 | ₹ 10,07,986 |
இதுதவிர, மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மேக்னைட் டர்போ மேனுவல் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 20kmpl ஆகவும், சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் மைலேஜ் 17.4kmpl ஆகும்.
NISSAN MAGNITE 1.0 L Turbo Petrol Price list | ||
---|---|---|
Trim | Ex-showroom Price | on-Road Price |
XL MT | ₹ 8,25,000 | ₹ 9,59,976 |
XV MT | ₹ 9,35,000 | ₹ 10,68,980 |
XV Premium MT | ₹ 9,88,000 | ₹ 11,29,067 |
XV CVT | ₹ 10,15,000 | ₹ 11,60,765 |
XV Premium CVT | ₹ 10,66,000 | ₹ 12,99,067 |
Kuro Edition MT | ₹ 9,65,000 | ₹ 11,18,732 |
kuro Edition CVT | ₹ 10,45,900 | ₹ 12,72,986 |
(All on-road Price Tamilnadu)