மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆல்டோ காரின் மூன்றாம் தலைமுறை மாடல் முதன்முறையாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படம் இணையத்தில் கசிந்துள்ளது.
2012 முதல் விற்பனையில் உள்ள ஆல்டோ காருடன் ஒப்பிடும் போது புதிய ஆல்டோ கூடுதலான உயரம் மற்றும் நீளத்தை பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில், ஹெட்லைட் வடிவம் மற்றும் பானட் தற்போதுள்ள மாடலை போலவே இருக்கின்றது. ஆனால் ரேடியேட்டர் கிரில் சற்று மாறுபட்டதாக உள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய விபத்து சோதனை விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள 2022 மாருதி ஆல்டோ காரில் ஃப்ளாப்-ஸ்டைல் கதவு கைப்பிடிகள் மற்றும் தற்போதைய மாடலை போலவே ஜன்னல் பகுதியையும் கொண்டுள்ளது. புதிய காரில் ஐஎஸ்ஓஃபிக்ஸ் மவுண்ட்கள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடியுடன் ஸ்டாண்டர்டாக இரட்டை முன் ஏர்பேக்குகளுடன் வரக்கூடும். இன்டிரியர் படங்கள் தற்போது வெளியாகவில்லை.
796cc பெட்ரோல் என்ஜின் 47 BHP மற்றும் 69 Nm டார்க் வெளிப்படுத்தும். கூடுதலாக CNG ஆப்ஷனில் 40 BHP மற்றும் 60 Nm வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டலாம்.
அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் 2022 புதிய மாருதி ஆல்டோவின் சந்தை அறிமுகம் இருக்கலாம். ஆல்டோவுக்கு முன், மாருதி பலேனோ, செலிரியோ கார்களில் சிஎன்ஜி வசதி புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source – youtube/wanderlust shashank