இந்தியாவில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜெண்டர் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு ரூ.29.98 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய 201 ஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் வழங்கும் 2.7 லிட்டர் டீசல் இன்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபார்ச்சூனர் ‘லெஜெண்டர்’ வழக்கமான மாடலை விட மாறுபட்ட ஸ்டைலில் ஸ்போர்ட்டிவான தோற்றமுடைய கொண்டுள்ளதால் இலகுவாக வேறுபடுத்தப்படுகின்றது. இந்த எஸ்யூவி-ல் மிக நேர்த்தியான ஹெட்லேம்ப் டி.ஆர்.எல், இரண்டு வண்ண கலவை, வெவ்வேறு பம்பர்கள் மற்றும் இன்னும் சில டிசைன் புதுப்பிப்புகளை பயன்படுத்துகிறது. முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் பெரிய 20 அங்குல டூயல் டோன் அலாய் வீல் பெறுகிறது. இந்தியாவில் வெள்ளை மற்றும் மேற்கூறை கருப்பு என்ற வண்ணத்துடன், கருப்பு மற்றும் மரூன் என இரண்டு விதமான இன்டிரியர் நிறத்தை கொண்டுள்ளது.
பொதுவாக இன்டிரியரில் தற்போது உள்ள மாடலின் அமைப்பினை தக்க வைத்துக் கொண்டாலும் கூடுதலான பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும். புதிய 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் உள்ளிட்ட வசதிகள் இணைக்கப்பட்டிருக்கின்றது.
360 டிகிரி வியூ கேமரா, எல்இடி ஆம்பியன்ட் லைட்டிங், 9 ஜே.பி.எல் ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்ட கிளஸ்ட்டருடன் வந்துள்ளது.
புதிய மாடல் தொடர்ந்து 164 bhp மற்றும் 245 Nm டார்க் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 177 HP ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 450 Nm டார்க்கினை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பெற்றதாக அமைந்துள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 4×4 மற்றும் 4×2 டிரைவிலும் கிடைக்கின்றது. கூடுதலாக ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 201 ஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் வழங்குகின்றது.
பார்ச்சூனரில் பெட்ரோல் இரு சக்கர டிரைவ் மட்டுமே உள்ள நிலையில், டீசல் 4×4 ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோ என இரண்டிலும் கிடைக்கின்றது. புதிய பார்ச்சூனரின் லெஜெண்டர் 4×2 டிரைவில் மட்டுமே உள்ளது.
2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை பட்டியல்
2021 Toyota Fortuner | விலை |
---|---|
2021 Toyota Fortuner Petrol MT 4×2 | ரூ.29.98 லட்சம் |
2021 Toyota Fortuner Petrol AT 4×2 | ரூ.31.57 லட்சம் |
2021 Toyota Fortuner Diesel MT 4×2 | ரூ.32.48 lலட்சம் |
2021 Toyota Fortuner Diesel AT 4×2 | ரூ.34.84 லட்சம் |
2021 Toyota Fortuner Diesel MT 4×4 | ரூ.35.14 லட்சம் |
2021 Toyota Fortuner Diesel AT 4×4 | ரூ.37.43 லட்சம் |
2021 Toyota Fortuner Legender 4×2 AT | ரூ.37.58 லட்சம் |
(Ex-Showroom, Delhi)
முன்பாக விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.1.32 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3.00 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டூராஸ் ஜி 4 மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.