முக்கிய குறிப்பு
- நான்காம் தலைமுறை கியா கார்னிவல் டீசர் வெளியீடு
- இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட கார்னிவல் எம்பிவி மாடல் அடுத்த சில மாதங்களுக்குள் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியாகுவதனை உறுதி செய்யும் டீசரை வகையில் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள டீசரில் முன்புற டைகர் நோஸ் கிரில் அமைப்பில் மாற்றமும், உயரமான வீல் ஆர்ச், ஸ்டைலிஷான புதிய அலாய் வீல் டிசைன் பெற்றதாக அமைந்திருக்கும். A,B,C மற்றும் D ஆகியவற்றில் கருப்பு நிறத்தினை வழங்கி மிதக்கும் வகையிலான மேற்கூறை அமைப்பினை கொண்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட 40 மிமீ வரை கூடுதலான நீளம் மற்றும் 30 மிமீ கூடுதல் வீல் பேஸ் பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.
உயர் ஆடம்பர வசதியை பெற்ற 4 இருக்கை கார்னிவல் முதல் அதிகபட்சமாக 11 இருக்கைகள் கொண்ட மாடல் வரை விற்பனைக்கு வழக்கம் போல அமைந்திருக்கும். 2.2 லிட்டர் டீசல் என்ஜின் உட்பட 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.6 லிட்டர் ஹைபிரிட் என்ஜின் வழங்கப்பட்டிருக்கும்.
நான்காம் தலைமுறை கியா கார்னிவல் எம்பிவி சர்வதேச அளவில் சில நாடுகளில் 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களிலும், இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.