பிஎஸ்6 என்ஜின் பெற்ற புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் நவீன நுட்பங்களை பெற்றதாக ரூ.54.94 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிஎஸ்6 ஆதரவை பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பெற்றுள்ள எவோக் காரில் D180 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் 4000 ஆர்.பி.எம்மில் 177 பிஎச்பி பவர் மற்றும் 1750-2500 ஆர்.பி.எம்மில் 430 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இது மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 205 கிமீ ஆகும்.
P250 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 5500 ஆர்.பி.எம்மில் 245 பிஎச்பி பவர் மற்றும் 1500-4500 ஆர்.பி.எம்-மில் 365 என்எம் டார்க்கை வழங்குகிறது.இது மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.5 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆகும். டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் என இரண்டும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு ஆல்-வீல் டிரைவை பெறுகின்றன.
இந்திய சந்தையை பொறுத்தவரை, புதிய எவோக் சந்தையில் கிடைக்கின்ற மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி, பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மற்றும் ஆடி கியூ 5 போன்றவற்றை எதிர்கொள்கின்றது.
எவோக் S டீசல் ரூ. 54.94 லட்சம்
எவோக் R-Dynamic SE டீசல் – ரூ. 59.85 லட்சம்