மாருதி சுஸூகி நிறுவனத்தின் மேம்பட்ட 2020 டிசையர் காரின் தோற்ற அமைப்பு மற்றும் புதிய பெட்ரோல் என்ஜின் பெற்றுள்ளது. டீசல் என்ஜின் நீக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனை அறிந்து கொள்ளுவோம்.
டிசைன் மாற்றங்கள்
ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வந்துள்ள டிசையரில் குறிப்பாக முகப்பு தோற்ற அமைப்பில் அதிகப்படியான மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்புற கிரில் அமைப்பு மாற்றப்பட்டு, எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகள், பனி விளக்கு அறை, ஏர் டேம் போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டினை பொறுத்தவரை, 15 அங்குல டூயல் டோன் அலாய் வீல் புதுப்பிக்கப்பட்டும், பின்புறத்தில் பம்பரில் டிசைன் மாற்றங்கள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்
இன்டிரியர் பொறுத்தவரை ,மேம்பாடுகள் டூயல் டோன் வழங்கப்பட்டு மிக நேர்த்தியான ஃபேக்ஸ் வுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய வசதிகளுடன் மேம்பட்டத்தாக உள்ளது. இதன் மூலமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் கிடைக்கும்.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் டிசையர் ஃபேஸலிஃப்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், ISOFIX இருக்கை, ஏபிஎஸ் உடன் இபிடி. ஏஜிஎஸ் வேரியண்டுகளில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் போன்றவை உள்ளது.
என்ஜின்
டீசல் என்ஜின் பெற்ற மாடல் பிஎஸ்4 முறைக்கு மாற்றமல் விடுவிக்கப்பட்ட நிலையில், இனி பெட்ரோல் என்ஜின் பெற்றதாக மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.
1.2 லிட்டர் K12C டூயல் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் 7 ஹெச்பி வரை கூடுதல் பவரை வெளிப்படுத்துகின்றது.
அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் வழங்குகின்ற என்ஜினில் 5 வேக மேனுவல் உட்பட ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.
டிசையரின் மைலேஜ் லிட்டருக்கு 23.26 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 24.12 கிமீ ஆகும்.
போட்டியாளர்கள்
ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் டாடா டிகோர் போன்றவற்றை நேரடியாக மாருதி சுசுகியின் டிசையர் கார் எதிர்கொள்ளுகின்றது.
விலை
Dzire Lxi – ரூ. 5.89 லட்சம்
Dzire Vxi – ரூ. 6.79 லட்சம்
Dzire Vxi (AGS) – ரூ. 7.31 லட்சம்
Dzire Zxi – ரூ. 7.48 லட்சம்
Dzire Zxi (AGS) – ரூ. 8 லட்சம்
Dzire ZXi+ – ரூ. 8.28 லட்சம்
Dzire Zxi+ (AGS) – ரூ. 8.80 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)