மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.5.89 லட்சம் முதல் ரூ.8.81 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது முந்தைய மாடலை விட ரூபாய் 6 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பாக இடம்பெற்றிருக்கின்ற என்ஜினுக்கு மாற்றாக இப்பொழுது மிகவும் பவர்ஃபுல்லான 1.2 லிட்டர் K12C டூயல் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் 7 ஹெச்பி வரை கூடுதல் பவரை வெளிப்படுத்துகின்றது.
அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் வழங்குகின்ற என்ஜினில் 5 வேக மேனுவல் உட்பட ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த என்ஜினில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இடம் பெறவில்லை. மாற்றாக ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் என்ஜினை தானாகவே ஆஃப் செய்து ஆன் செய்துக் கொள்ளும் நுட்பமாகும். இதன் காரணமாக எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கும்.
டிசையரின் மைலேஜ் லிட்டருக்கு 23.26 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 24.12 கிமீ ஆகும்.
முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கிரில் ஆனது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பனி விளக்கு அறை, ஏர் டேம் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லை. கூடுதலாக பிரீமியம் சில்வர் மற்றும் பீனிக்ஷ் ரெட் நிறம் இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் இன்டிரியர் பொறுத்தவரை ,மேம்பாடுகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய வசதிகளுடன் மேம்பட்டத்தாக உள்ளது. இதன் மூலமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் கிடைக்கும்.
மற்றபடி இந்த புதிய மாருதி சுசூகி டிசையர் ஃபேஸலிஃப்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், ISOFIX இருக்கை, ஏபிஎஸ் உடன் இபிடி. ஏஜிஎஸ் வேரியண்டுகளில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் போன்றவை உள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் டாடா டிகோர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.
2020 Maruti Dzire Facelift Price
Dzire Lxi – ரூ. 5.89 லட்சம்
Dzire Vxi – ரூ. 6.79 லட்சம்
Dzire Vxi (AGS) – ரூ. 7.31 லட்சம்
Dzire Zxi – ரூ. 7.48 லட்சம்
Dzire Zxi (AGS) – ரூ. 8 லட்சம்
Dzire ZXi+ – ரூ. 8.28 லட்சம்
Dzire Zxi+ (AGS) – ரூ. 8.80 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)