இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஆரம்பநிலை எஸ்யூவி பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் பிஎஸ்6 ஆதரவினை பெற்ற 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. 189 பிஹெச்பி பவரினை 5,000-6,000 ஆர்.பி.எம்-லும் மற்றும் 280 என்எம் டார்க்கினை 1,350-4,600 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும். இதில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் உள்ளது.
அடுத்து, 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் 187 பிஹெச்பி பவரை வழங்க 4,000 ஆர்.பி.எம்-லும் மற்றும் 400 Nm டார்க் வெளிப்படுத்தும் 1,750-2,500 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும். இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது.
SportX, xLine மற்றும் M Sport என மூன்று விதமான வேரியண்டினை பெறகின்றது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட கிட்னி கிரில் மற்றும் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது. எம் ஸ்போர்ட் வேரியண்டில் மட்டும் மாறுபட்ட பம்பர் பெற்றுள்ளது.
புதிய எக்ஸ் 1 காரில் ஆப்பிள் கார் ப்ளே ஆதரவைப் பெற்ற 8.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பிஎம்டபிள்யூ X1 விலை பட்டியல்:
sDrive20i SportX – ரூ. 35.90 லட்சம்
sDrive20i xLine – ரூ. 38.70 லட்சம்
sDrive20d xLine – ரூ. 39.90 லட்சம்
sDrive20d M Sport – ரூ. 42.90 லட்சம்