புதிய Toyota’s New Global Architecture (GA-K) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட 8வது தலைமுறை டொயோட்டா கேம்ரி கார் இந்திய சந்தையில் ஹைபிரிட் ஆப்ஷனை பெற்ற மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கேம்ரி பெட்ரோல் வெர்ஷனில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பில்லை என தெரிகின்றது. முதற்கட்டமாக கேம்ரி ஹைபிரிட் கார் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. மிக நேர்த்தியான வி வடிவ கிரிலை பெற்று நேர்த்தியான ஹெட்லேம்ப் மற்றும் வட்ட வடிவ பனி விளக்கு அறை என அமைந்துள்ளது.
இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் டொயோட்டா எவ்வித சமரசமும் மேற் கொள்ளாது. எனவே ஏர்பேக் ஏபிஎஸ், இபிடி போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
கேம்ரி ஹைபிரிட் மாடலில் இடம்பெற்றுள்ள 2.5 லிட்டர் நான்கு சிலின்டர் என்ஜின் 211PS பவர் மற்றும் 202Nm பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 120PS பவர் மற்றும் 202Nm டார்க்கினை வழங்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட், ஸ்கோடா சூப்பர்ப், வோக்ஸ்வேகன் பஸாத் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் விலை ரூ. 39 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.