வரும் ஜனவரி 23ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள 2019 மாருதி வேகன்ஆர் காரின் டீசர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. வேகன்ஆர் கார் விலை ரூ.4.50 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
2019 மாருதி வேகன்ஆர்
புதிய மாருதி சுசூகி வேகன்ஆர் மாடல் முந்தைய மாடலை விட கூடுதல் வசதிகள், அதிக இடவசதி மற்றும் இலகு எடையை கொண்டுள்ள புதிய மாடல் பலேனோ, ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் எர்டிகா கார்கள் வடிவமைக்கபட்ட Heartect பிளாட்பாரத்தில் வரவுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் டால் பாய் ஹேட்பேக் மாடலாக விளங்குகின்றது.
முதன்முறையாக மாருதி நிறுவனம் வேகன்ஆர் டீசரை வெளியிட்டிருந்தாலும், வேகன் ஆர் காரின் படங்கள் மற்றும் வேரியன்ட் விபரம் அனைத்து முன்பாகவே வெளிவந்துள்ளது.
மொத்தமாக 7 வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் LXi, VXi மற்றும் VXi AGS போன்ற பேஸ் வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது. 1.2 லிட்டர் என்ஜின் VXi , VXi AGS, ZXi மற்றும் ZXi AGS போன்ற வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.
புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதைத் தவிர K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி வேகன் ஆர் காரில் சிஎன்ஜி தேர்வு கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.
புதிதாக வரவுள்ள மாருதி சுசூகி வேகன் ஆர் காருக்கு போட்டியாக டட்சன் கோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ, மற்றும் மாருதி செலிரியோ போன்ற கார்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.
ஜனவரி 23, 2019 யில் வெளியாக உள்ள மாருதி சுசுகி வேகன் ஆர் கார் விலை ரூ. 4.50 லடசத்தில் தொடங்கி ரூ. 6.80 லட்சத்திற்குள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.