ரூ.4.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ள மாருதி வேகன் ஆர் காருக்கு 12,000-த்திற்கு அதிகமான முன்பதிவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகன் ஆர் காரின் முன்பதிவு ஜனவரி 14ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.
மாருதி வேகன் ஆர்
டால்பாய் ஹேட்ச்பேக் என அழைக்கப்படுகின்ற மாருதி சுஸூகி நிறுவனத்தின் வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இருவிதமான என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மாருதி வேகன் ஆர் காரின் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 21.5 கிமீ ஆகும்.
1.0 லிட்டர் என்ஜினை விட 10 சதவீத சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.
மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 25.1 கிமீ ஆகும்.
1999 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகின்ற வேகன்ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை 22 லட்சம் இலக்கை கடந்துள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள மூன்றாவது தலைமுறை மாருதி வேகன்ஆர் காருக்கான முன்பதிவு கடந்த ஜனவரி 14ந் தேதி முதல் டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்பதிவு தொடங்கிய கடந்த 9 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 12,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.
மாருதி சுஸூகி வேகன்ஆர் விலை பட்டியல்
வேகன்ஆர் 1.0 விலை பட்டியல்
LXi – ரூ.4.19 லட்சம்
VXi – ரூ.4.69 லட்சம்
VXi AGS – ரூ.5.16 லட்சம்
வேகன்ஆர் 1.2 விலை பட்டியல்
VXi – ரூ.4.89 லட்சம்
VXi AGS – ரூ.5.22 லட்சம்
ZXi – ரூ.5.36 லட்சம்
ZXi AGS – ரூ.5.69 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)