ஹூண்டாய் இந்தியா நிறுவனம், தனது குறைந்த விலை சான்ட்ரோ காரின் வேரியண்டை நீக்கிவிட்டு, கூடுதல் வசதிகளை பெற்ற பேஸ் வேரியண்டினை ஹூண்டாய் சான்ட்ரோ பெற்றதாக வந்துள்ளது.
விற்பனையில் உள்ள டி-லைட் மற்றும் எரா என இரு வேரியண்டுகளை நீக்கி விட்டு Era Executive என்ற வேரியண்டை பேஸ் மாடலாக விற்பனைக்கு ஜூலை 1 முதல் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் சான்ட்ரோ
சான்ட்ரோ காரில் பொருத்தப்பட்டுள்ள 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வழங்குகின்றது.
எரா எக்ஸ்கூட்டிவ் வேரியண்டில் முன்புற பவர் விண்டோஸ், முன்புற பம்பர் பாடி நிறத்தில் வழங்கப்பட்டிருப்பதுடன், இரட்டை வண்ண ரியர் பம்பர் மற்றும் மேனுவல் ஏசி பெற்றுள்ளது.
அடுத்தப்படியாக மேக்னா வேரியண்டில் 2 டின் ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜர், புளூடூத் இணைப்பு வசதிகள் போன்றவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்டுகளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
2019 ஹூண்டாய் சான்ட்ரோ | விலை (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) |
Era Executive | ரூ. 4.15 லட்சம் |
Magna | ரூ. 4.72 லட்சம் |
Magna AMT | ரூ. 5.21 லட்சம் |
Magna CNG | ரூ. 5.38 லட்சம் |
Sportz | ரூ. 5.02 லட்சம் |
Sportz AMT | ரூ. 5.60 லட்சம் |
Sportz CNG | ரூ. 5.68 லட்சம் |
Asta | ரூ. 5.50 லட்சம் |