இந்தியாவில் நடை பெற்று வரும் 2018 வோல்க்ஸ்ஃப்ஸ்ட் வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது என்று தெரிவித்துள்ள வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம், இந்தாண்டு பெஸ்டிவலை முன்னிட்டு, இந்தியாவின் 104 நகரங்களில் உள்ள 121 டீலர்ஷிப்களிலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் இந்தாண்டு தனது 90 அண்டு விழாவை மிக்கி மவுஸ் மேஜிக் உடன் கொண்டாடுகிறது. “ஹாப்பி டேஸ் ஆர் ஹியர் எகேன்” என்ற தலைப்பில் இந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறது. 1928ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி வெளியிடப்பட்ட தங்களது நிறுவனத்தின் முதல் காரான ‘ஸ்டீம்போட் விலே’ கார்களில் மிக்கி மவுஸ் படம் இடம்பெற்றிருந்து. இந்த கார் வெளியாகி சரியாக 90 ஆண்டுகள் ஆகிவிட்டது.
2018 வோல்க்ஸ்ஃப்ஸ்ட் குறித்து பேசிய வோக்ஸ்வாகன் பயணிகள் கார் இயக்குனர் திரு. ஸ்டெஃபென் நாப், மாற்றகளை ஏற்றுக்கொள்ளும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப, ஓவ்வொரு நாளும் கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு கூடுதல் கொண்டாட்டமாக, டிஸ்னி இந்தியாவுடன் இணைந்து மிக்கி மவுஸ் கேரக்டர்களுடன் கொண்டாடுகிறோம். வோல்க்ஸ்ஃப்ஸ்ட்டின் “ஹாப்பி டேஸ் ஆர் ஹியர் எகேன்” என்ற தலைப்பில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்ப விழாவில் வாடிக்கையாளர்களும் பங்கேற்க வேண்டும்.
2018 வோல்க்ஸ்ஃப்ஸ்ட்டில், வாடிக்கையாளர்களுக்கு, கவரும் வகையிலான பைனான்ஸ், இன்சூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் களுடன், டெஸ்ட் டிரைவ் செய்பவர்களுக்கு கிப்ட்கள், புக்கிங் செய்பவர்களுக்கு ஆப்டர் சேல்ஸ் சர்விஸ்களும் கிடைக்கும்.
இந்த பிரச்சாரத்தின் போது, வோக்ஸ்வாகன் டீலர்ஷிப்கள் மிக்கி போட்டோ-ஒப் கார்னர், குழந்தைகளுக்கான கலரிங் ஆக்டிவிட்டி மற்றும் டெஸ்ட் டிரைவ், புக்கிங்கள் மற்றும் ஆப்டர் சேல் சர்விஸ் போன்றவற்றையும் ஏற்பாடு செய்வார்கள்.