இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எக்ஸ்யூவி 500 எஸ்யூவி மாடலில் மேம்படுத்தப்பட்ட 2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி ஏப்ரல் 18ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
2018 மஹிந்திரா XUV500
அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட 2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல் உற்பத்தி நிலை மாடல்களாக டீலர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட எக்ஸ்யூவி500 படங்கள் வெளியாகியுள்ளது.
முன்பக்க தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட முகப்பு கிரில் பெற்றிருப்பதுடன் , புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ளதை தொடர்ந்து முகப்பு பம்பர் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், பக்கவாட்டில் புதிய வடிவத்திலான அலாய் வீல் பெற்றிருப்பதுடன் , பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பர், டெயில் லைட், மற்றும் நெம்பர் பிளேட் பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்டராய்டு ஆட்டோ உட்பட புதுப்பிக்கப்பட்ட இருக்கை அமைப்பினை கொண்டதாக இருக்கலாம்.
தற்போது விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றிருக்கின்ற எம்-ஹாக் 2.2 லிட்டர் எஞ்சின் 155 ஹெச்பி பவர் மற்றும் டார்க் கொண்டிருப்பதுடன், பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.
படங்கள் உதவி – team-bhp