ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக விளங்கும் ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் அடிப்படையில் ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் ரூ. 8.01 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன்
மிகவும் ஸ்டைரலிஷான க்ராஸ்ஓவர் ரக மாடலாக விளங்குகின்ற ஹோண்டா WR-V மாடலின் S வேரியன்ட் அடிப்படையில் கூடுதல் வசதிகளை பெற்றதாக வெளியாகியுள்ள எட்ஜ் எடிசன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
எஞ்சின் ஆற்றல் மற்றும் இழுவைத் திறன் ஆகியவற்றில் மாற்றங்கள் இல்லாமல், 89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது. பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.
99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.
WR-V எட்ஜ் எடிசன் மாடலின் தோற்ற அமைப்பில் புதிய மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றிருப்பதுடன், வெள்ளை நிற பெயின்ட் செய்யப்பட்ட மாடல் மற்றும் இன்டிரியர் அமைப்பில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் பார்கிங் செனன்சார் மற்றும் ஹோண்டா கனெக்ட் கார் ஆப் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.
ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் பெட்ரோல் – ரூ.8.01 லட்சம்
ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் டீசல் – ரூ.9.01 லட்சம்
சாதாரண எஸ் வேரியன்ட் மாடலை விட ரூ.20,000 விலை கூடுதலாக இந்த சிறப்பு எடிசன் விற்பனைகு கிடைக்க தொடங்கியுள்ளது.