₹. 56.90 லட்சம் விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற மூன்றாவது தலைமுறை பிஎம்டபிள்யூ X3 xDrive30i மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக எக்ஸ்3 காரில் டீசல் எஞ்சின் வேரியன்ட் வெளியானது குறிப்பிடதக்கதாகும்.
பிஎம்டபிள்யூ X3
சில வாரங்களுக்கு முன் வெளியான X3 டீசல் எஞ்சின் மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெட்ரோல் ரக வேரியன்ட் ஒற்றை xDrive30i மட்டும் பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள ட்வீன் டர்போ பெட்ரோல் 2.0 லிட்டர் எஞ்சின், இதே என்ஜின் தான் பிஎம்டபிள்யூ 3 மற்றும் 5 சீரிஸ் மாடல்களில் உள்ளது.
252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மாடல் 6.3 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.
முந்தைய இரண்டாவது தலைமுறை எக்ஸ் 3 மாடலை விட 55 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ள புதிய மாடலின் டிசைன் அம்சத்தில் பெரிதான மாற்றங்களை பெறாமல் வந்துள்ள எக்ஸ் 3 xDrive30i வேரியன்டில் 10.25 இன்ச் ஐடிரைவ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது.
பிஎம்டபிள்யூ X3 xDrive30i விலை ₹. 56.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)