சர்வதேச அளவில் பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி மாடலாக விளங்கும் பென்ட்லீ நிறுவனத்தின் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் V8 வேரியன்ட் ரூ. 3.78 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பென்ட்லீ பென்டைகா V8 எஸ்யூவி
புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பென்டைகா வி8 எஸ்யூவி விற்பனையில் உள்ள W12 பெட்ரோல் மற்றும் V8 டீசல் ஆகிய இரு வேரியன்ட்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ள V8 பெட்ரோல் ரக மாடலகும்.
549hp பவர் , 770Nm டார்க் வழங்கவல்ல 4.0 லிட்டர் V8 ட்வீன் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்துப்பட்ட ஆற்றல் 4 சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்பட்டு 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகள் எடுத்துக் கொள்ளும், ஆனால் W12 வேரியன்ட் 4.1 விநாடிகளும், அதிகபட்ச வேகம் மணிக்கு 301 கிமீ ஆகும். ஆனால் பென்டைகா V8 எஸ்யூவி அதிகபட்ச வேகம் மணிக்கு 290 கிமீ ஆகும்.
4 இருக்கைகளை கொண்ட இந்த சொகுசு எஸ்யூவி காரில் பல விதமான நவீன சொகுசு வசதிகள் மற்றும் ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு அனுபவத்தினை மிக சிறப்பான முறையில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 60ஜிபி ஹார்ட் டிரைவ் சேமிப்பகத்தை பெற்றுள்ளது. மேலும் 10.2 இஞ்ச் அகலம் கொண்ட பென்ட்லி ஆன்ட்ராய்டு டேப்லெட் பொருத்தியுள்ளனர் . இதனை தேவைப்படும் பொழுது தனியாக எடுத்து கொள்ள முடியும்.
85 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் சுமார் 745 கிமீ மைலேஜ் தரும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேரியண்டில் முன்புற சக்கரத்தில் 440மிமீ டிஸ்க் பின்புற டயரில் 370மிமீ டிஸ்க் பெற்றதாக விளங்குகின்றது.
இந்நிறுவனத்தின் W12 வேரியண்டை விட ரூ. 34 லட்சம் விலை குறைந்ததாக வெளியாகியுள்ள பென்ட்லீ பென்டைகா V8 எஸ்யூவி விலை ரூ. 3.78 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.