2017 புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி கார் ரூ.34.20 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. குவாட்ரோ மற்றும் முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷனுடன் முந்தைய மாடலை விட கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலாக க்யூ3 எஸ்யூவி வந்துள்ளது.
புதிய ஆடி க்யூ3
ஆக்ரோஷமான தோற்றத்தை கொண்ட க்யூ3 எஸ்யூவி மாடலில் முகப்பு பம்பர்கள் , ஏர்டேம் போன்றவை மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன் பல்வேறு வசதிகளை பெற்றதாக க்யூ3 விளங்குகின்றது. குறிப்பாக பனோரமிக் சூரிய மேற்கூறை, 17 அங்குல V ஸ்போக் அலாய் வீல், எல்இடி விளக்குகளை கொண்ட முகப்பு விளக்கு , என பல மேம்பட்ட அம்சங்களை பெற்றதாக 2017 Q3 மாடல் விளங்குகின்றது.
இன்டிரியரில் உயர்தர லெதர் இருக்கைகளுடன் , எலக்ட்ரிகல் அட்ஜஸ்மெண்ட் நிரந்தரம்சமாக பெற்ற முன்பக்க இருக்கைகள், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், MMI நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட பல வசதிகளை பெற்று விளங்குகின்றது.
க்யூ3 எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்பொருத்தப்பட்டு இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வேரியன்ட்களை கொண்டுள்ளது.
முன்புற வீல் டிரைவ் பெற்ற மாடல் அதிகபட்சமாக 147 bhp பவருடன் , குவாட்ரோ அல்லது ஆல் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 182 bhp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களிலும் 7 வேக ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
ஆடி Q3 காரின் முன்பக்க வீல் டிரைவ் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 18.51 கிமீ ஆகும்.
ஆடி Q3 காரின் ஆல் வீல் டிரைவ் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 15.17 கிமீ ஆகும்.
பிஎம்டபிள்யூ X1 மற்றும் மெர்சிடஸ் GLA எஸ்யீவிகளுக்கு எதிராக ஆடி Q3 மாடல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆடி Q3 விலை பட்டியல்
ஆடி Q3 முன்பக்க வீல் டிரைவ் – ரூ. 34.20 லட்சம்
ஆடி Q3 குவாட்ரோ – ரூ. 37.20 லட்சம்
(விலை விபரம் டெல்லி எக்ஸ்ஷோரூம்)