கம்பீரமான எஸ்யூவிகளில் ஒன்றான இந்தியாவின் பிரபலமான டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ரூ.25.92 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
புதிய இன்னோவா க்ரீஸ்ட்டா காரினை தொடர்ந்து டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ள ஃபார்ச்சூனர் எஸ்யூவி டொயோட்டாவின் புதிய TNGA தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஃபார்ச்சூனர் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் மாறுபட்ட புதிய தலைமுறை மாடலாகும்.
ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் முகப்பில் அகலமான இரு ஸ்லாட்களுக்கு மத்தியில் லோகோ , வி வடிவ குரோம் பட்டை , 17 இன்ச் அலாய் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் மாடலில் ஸ்டைலான 18 இன்ச் அலாய் வீல் , புராஜெக்டர் எல்இடி முகப்பு விளக்குகள் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கு , பின்புறத்திலும் சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது.
நவீன கால டிசைனுக்கேற்ற பல அம்சங்களை புகுத்தி 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , க்ரோம் பட்டைகள் , ஸ்டைலான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பலவற்றை பெற்றுள்ளது.
டாப் வேரியண்டில் 7 காற்றுப்பைகள் , ஏபிஎஸ், இபிடி , ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , ஹீல் ஹோல்டு அசிஸ்ட் என பலவற்றை பெற்று விளங்குகின்றது.
புதிய ஃபார்ச்சூனர் எஞ்சின்
முந்தைய 3.0 லிட்டர் என்ஜினுக்கு பதிலாக 2.8 லிட்டர் ஜிடி என்ஜினை பெற்று வெளிப்படுத்தும் ஆற்றல் 177 hp மற்றும் டார்க் 420Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும் 2WD மற்றும் 4WD என இருவிதமான டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.
2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் 166 hp மற்றும் டார்க் 245Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும் 2WD டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்க உள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை பட்டியல்
- Toyota Fortuner 2.8 Diesel 4X2 MT – ₹ 27.52 லட்சம்
- Toyota Fortuner 2.8 Diesel 4X2 AT – ₹ 29.14 லட்சம்
- Toyota Fortuner 2.8 Diesel 4X4 MT – ₹ 30.05 லட்சம்
- Toyota Fortuner 2.8 Diesel 4X4 AT – ₹ 31.12 லட்சம்
பெட்ரோல் மாடல் விலை
- Toyota Fortuner 2.7 Petrol 4X2 MT – ₹ 25.92 லட்சம்
- Toyota Fortuner 2.7 Petrol 4X2 AT – ₹ 27.61 லட்சம்
(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )
ஃபோர்டு எண்டெவர் , செவர்லே ட்ரெயில்பிளேசர் , ஹூண்டாய் சான்டா ஃபீ , சாங்யாங் ரெக்ஸ்டான் , இசுசூ MU-7 மற்றும் பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை சந்திக்கின்றது.