அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மாருதி டிஸையர் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட டிசையர் கார் புதிய ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதாகும்.
1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டீசல் என்ஜின் மாடலில் சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வரவுள்ளது சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக உறுதியாகியுள்ளது.
பின்புற அமைப்பில் பூட் ஸ்பேஸ் வசதியுடன் வரவுள்ள டிஸையர் செடான் ரக மாடலில் க்ரோம் பட்டையுடன், எல்இடி டெயில் விளக்கினை பெற்றுள்ளது. பக்கவாட்டில் 15 அங்குல மல்டி ஸ்போக் டைமன்ட் கட் அலாய் வீலுடன் , ஒஆர்விஎம்-யில் டர்ன் இன்டிகேட்டர் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதாகவே உள்ள டிசையரில் உட்புறத்தில் மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , கருப்பு மற்றும் பீஜ் நிறங்களின் கலவையில் உருவான டேஸ்போர்டு, மர வேலைப்பாடுகளை கொண்டிருப்பதுடன் மிக நேர்த்தியான அம்சங்களை பெற்றுள்ளது .
இந்தியாவில் புதிய தலைமுறை மாருதி டிஸையர் கார் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜப்பான் மற்றும் ஐரோப்பியா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விற்பனையில் உள்ள மாடலை விட ரூபாய் 60,000 முதல் ரூபாய் 70000 வரை கூடுதலாக விலை அமைந்திருக்கும்.
இதுபோன்ற சோதனை ஓட்ட கார் படங்களை படம் பிடித்து அனுப்ப admin (at) automobiletamilan.com
படங்கள் உதவி – gaadiwaadi