வருகின்ற 23ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் நுட்ப விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. எலன்ட்ரா 5 விதமான வேரியண்டில் கிடைக்கும்.
புதிய எலன்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்ஜின் ஆற்றல் 152 PS மற்றும் டார்க் 190 Nm ஆகும். 1.6 லிட்டர் CRDi எஞ்ஜின் ஆற்றல் 128 PS மற்றும் டார்க் 265 Nm ஆகும். இரு என்ஜின் ஆப்ஷனிலும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும்.
2016 ஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.6 கிலோமீட்டர் மற்றும் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22.4 கிலோமீட்டர் ஆகும்.
S, SX, SX AT, SX (o), SX (o) AT என மொத்தம் 5 விதமான வேரியண்டில் இரு எஞ்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்க உள்ள காரின் டாப் வேரியண்டில் இகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரைவிங் மோட் , 8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இனைந்த நேவிகேஷன் சிஸ்டம் , ஆப்பிள் கார் பிளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் இடம் பெற்றிருக்கலாம்.
16 இன்ச் அலாய் வீல் , புராஜெக்டர் முகப்பு விளக்கு , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கு , க்ரூஸ் கன்ட்ரோல் , ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் மேலும் பல வசதிகளுடன் நீலம் , சிவப்பு , வெள்ளை , கருப்பு மற்றும் சில்வர் போன்ற வண்ணங்களுடன் ரூ.16 லட்சத்தில் எலன்ட்ரா விற்பனைக்கு வரவுள்ளது.
தகவல் ; theautomotiveindia