ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபாரத்தினை அடிப்படையாக கொண்ட புதிய ஆக்டாவியா பல சிறப்பம்சங்களை கொண்டதாக விளங்கும்.
மூன்று விதமான ட்ரீம்களில் கிடைக்கும். அவை ஏக்டிவ், ஆம்பின்ட், மற்றும் எலிகன்ஸ் ஆகும். 1.4 லிட்டர் மற்றும் 1.8லிட்டர் என இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் ஆட்டோகியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் என இரண்டுவிதமான வகையிலும் கிடைக்கும்.
1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 140பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 250என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 16.8கிமீ ஆகும்.
1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 180பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 250என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 14.8கிமீ ஆகும்.
2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றல் 143பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 20.6கிமீ ஆகும். ஆட்டோ கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காரில் மைலேஜ் லிட்டருக்கு 19.3கிமீ ஆகும்.
7 விதமான வண்ணங்களில் ஆக்டாவியா கிடைக்கும். அவை கருப்பு, சிவப்பு, கிரே, சில்வர், வெள்ளை, பீஜி மற்றும் பூளூ ஆகும்.
2013 ஸ்கோடா ஆக்டாவியா விலை விபரம்.
பெட்ரோல் மாடல்
1.4 ஆக்டிவ் : ரூ.13.95 லட்சம்
1.4 ஆம்பிஷன் : ரூ. 14.95 லட்சம்
1.8 எலிகன்ஸ் : ரூ. 18.25 லட்சம்
டீசல் மாடல்
ஆக்டிவ் : ரூ.15.55 லட்சம்
ஆம்பிஷன் : ரூ.16.55 லட்சம்
ஆம்பிஷன் (ஆட்டோ) : ரூ. 17.55 லட்சம்
எலிகன்ஸ்(ஆட்டோ) : ரூ.19.45 லட்சம்