வருகின்ற நவம்பர் 14ந் தேதி ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் எஸ்யூவி பிரிமியம் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. டூஸான் எஸ்யூவி காரின் விலை ரூ. 18 லட்சம் முதல் 24 லட்சம் விலையில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி காம்பேக்ட் ரக சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் மாடலாக விளங்கி வருகின்றது. மற்றொரு எஸ்யூவி காரான சான்டா ஃபீ பிரிமியம் ரகத்தில் விற்பனையில் உள்ளது. இரு மாடல்களுக்கும் இடையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடபட்டுள்ள ஹூண்டாய் டூஸான் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 அரங்கில் காட்சிக்கு வந்தது.
முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டூஸான் எஸ்யுவி 1810 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்று சந்தையில் மதிப்பினை இழந்தது. ஆனால் தற்பொழுது யூட்டிலிட்டி சந்தையின் நிலை தற்பொழுது மேம்பட்டுள்ளது. மேலும் புதிதாக வரவுள்ள மூன்றாம் தலைமுறை டூஸான பல நவீன அம்சங்களை பெற்று சிறப்பான தோற்ற அம்சத்துடன் விளங்குகின்றது.
மிக வேகமாக பயணிகள் கார்களை விட எஸ்யூவி ரக கார்கள் சந்தையில் மதிப்பினை அதிகரித்து வருவதனால் செடான் ரக கார்களை விட எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு வலுசேர்க்கும் என்பதனால் ஹூண்டாய் டூஸான் காரினை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வருகின்ற பண்டிகை காலத்தில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 50 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் விலை ரூ. 18 லட்சம் முதல் ரூ.24 லட்சத்துக்குள் அமையலாம்.
டூஸான் எஸ்யூவி காரில் 136 PS மற்றும் 184 PS என இருவிதமான ஆற்றலை வெளிப்படுதமும் 2.0லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெறும்.
ஹோண்டா சிஆர்-வி காருக்கு நேரடியான போட்டியாளராக அமையும் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் மற்ற எஸ்யுவிகளான சாங்யாங் ரெக்ஸ்டான் , டொயோட்டா ஃபார்ச்சூனர் , ஃபோர்டு எண்டெவர் , பஜெரோ ஸ்போர்ட் , செவர்லே ட்ரெயில்பிளேசர், மற்றும் இசுசூ எம்யூ-7 போன்றவைகளுக்கும் போட்டியை ஏற்படுத்தும்.