ஹூண்டாய் எலைட் ஐ20 |
எலைட் ஐ20 காரில் ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் சில கூடுதல் வசதிகள் மற்றும் மாறுதல்களை செய்து சிறப்பு எடிசனாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 16 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் , மேற்கூரையில் குளோஸ் பேக் சேட் , B , C பில்லர்களில் கருப்பு நிறம் , பாடி ஸ்டிக்கர்கள் மற்றும் பின்புறத்தில் சிறப்பு வருட கொண்டாட எடிசனின் பேட்ஜ் போன்றவை பெற்றிருக்கும். மேலும் 2 டின் ஆடியோ சிஸ்டம் பூளூடூத் தொடர்பு போன்ற வசதிகளும் உள்ளன.
79பிஎச்பி ஆற்றலை வெளிப்படுட்டுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 86பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டிலும் கிடைக்கும்.
ஹூண்டாய் எலைட் i20 சிறப்பு எடிசன் விலை விபரம்
எலைட் ஐ 20 டீசல் ; ரூ.7.98 லட்சம் (ஆன் ரோடு விலை ரூ.9.12 லட்சம்)
எலைட் ஐ20 பெட்ரோல் ; ரூ.6.83 லட்சம் (ஆன் ரோடு விலை ரூ.7.82 லட்சம்)
(சென்னை விலை விபரம்)
Hyundai Elite i20 Anniversary Edition launched