ஸ்கோடா ரேபிட் காரின் ஆனிவர்சரி சிறப்பு பதிப்பில் கூடுதல் வசதிகளை பெற்று விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கோடா ரேபிட் காரில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
![]() |
ஸ்கோடா ரேபிட் |
ரேபிட் காரில் வேகம் , வாகனம் எங்கே செல்கின்றது , வாகனத்தின் வரலாறு போன்ற விவரங்களை குறுஞ்செய்து வழியாக உரிமையாளர் பெறும் வகையில் புதிய டிராக்புரோ நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நுட்பமானது டாப் எலகன்ஸ் வேரியண்டிலும் இனி கிடைக்கும்.
சிறப்பு பதிப்பில் வாகனத்தின் மேற்கூரையில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் புதிய பாடி கிராஃபிக்ஸ் போன்றவற்றுடன் உட்புறத்தில் வூட் ஃபினிஷ் பெற்றுள்ளது. மேலும் க்ரூஸ் கன்ட்ரோல் , ரீமோட் கட்டுப்பாடு வழியாக மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்த இயலும்.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் இந்த சிறப்பு ஸ்கோடா ரேபிட் ஆனிவர்சரி எடிசன் தொடக்க விலை ரூ.6.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆகும். மேலும் இந்த பதிப்பு செப்டம்பர் 30ந் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
Skoda Rapid Anniversary Edition Launched