ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ரேபிட் கார் வாங்குபவர்களுக்கு 100 சதவீத கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்பணம் இல்லாமல் ரேபிட் காரினை பெற்று செல்ல முடியும்.
இந்த கடன் திட்டத்தில் ரேபிட் கார் எக்ஸ்ஷோரூம் விலையில் 100 % கடனாக காரினை பெற்று கொள்ள முடியும். மேலும் இந்த திட்டத்திற்க்கான வட்டி விகிதம் மிக குறைவாகவே இருக்கும். இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 18 வரை மட்டுமே ஆகும்.
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரேபிட் காருக்கான திட்டத்தில் ஏப்ரல் மாதம் வரை இஎம்ஐ கட்டவேண்டியது இல்லை என அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது