லேண்ட் ரோவர் இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரோஞ்ச் ரோவர் எஸ்யூவி காரிகளில் 4.4 லிட்டர் டீசல் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் விற்பனையில் உள்ளது.
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் 2993 சிசி எஞ்சின் ஆனது டிவின் டர்போ வி6 டீசல் எஞ்சின் 255 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 600என்எம் ஆகும். இசட்எஃப் 8 ஸ்பீடு தானியிங்கி கியர் பாகஸ் பயன்படுத்தியுள்ளனர்.
0-100 கீமி வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டும். உச்சகட்ட வேகம் மணிக்கு 210 கீமி ஆகும். 3.0 லிட்டர் எஞ்சினில் இரண்டு விதமான மாறுபட்ட வகைகள் உண்டு. அவற்றில் பேஸ் எச்எஸ்இ மாடல் மற்றும் வோக் மாடல் ஆகும்.
ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் எச்எஸ்இ மாடல் விலை ரூ 1.44 கோடியாகும்.
ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் வோக் மாடல் விலை 1.64 கோடியாகும்.