ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ எஸ்ஆர் காரை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் வகையில் மட்டும் போலோ எஸ்ஆர் கிடைக்கும். போலோ எஸ்ஆர் கார் விலை ரூ 6.27 இலட்சம் ஆகும்.
போலோ SR காரில் 1.2 லிட்டர் கொள்ளவு கொண்ட 3 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 75BHP@5400 rpm மற்றும் டார்க் 110NM@3750 rpm. 5 ஸ்பீடு மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.
போலோ எஸ்ஆர் காரில் உள்ள வசதிகள் பாடி ஸ்கர்ட்ஸ், ரியர் ஸ்பாய்லர், குரோம் எக்ஸ்கேஸ்ன் டிப், குரோம் ஸ்டீரிப் ப்ரென்ட் க்ரீல் SR பேட்ஜ்.
மேலும் முன்புறம் இரண்டு காற்றுப்பைகள்,ABS, பல தகவல் டிஸ்பிளே,க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்ஸார், முன்புறம் மற்றும் பின்புறம் ஃபோக் விளக்குகள்.
ஃபோக்ஸ்வேகன் போலோ எஸ்ஆர் விலை 6.27 இலட்சம்.