ஜாகுவார் சொகுசு கார் நிறுவனம் புதிதாக எக்ஸ்ஜெ அல்டிமேட் காரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காரானது ஜாகுவார் எக்ஸ்ஜெ காரின் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும்.
ஜாகுவார் எக்ஸ்ஜெ அல்டிமேட் செடான் காரில் பல புதிய வசதிகள் இனைக்கப்பட்டுள்ளன. அவை LED பகல் நேர விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பகலில் எரியும். 20 இன்ச் மார்கோ ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்டிரியரில் பல மாற்றங்களை கொடுத்துள்ளனர்.
இரண்டு வகையான எஞ்சின் ஆப்ஷன் உள்ளது. அவை 3.0 லிட்டர் V6 டீசல் எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர் V8 எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் விலை 3.0 லிட்டர் எஞ்சின் ரூ 1.78 கோடி மற்றும்
5.0 லிட்டர் எஞ்சின் ரூ 1.87 கோடியாகும்.(மும்பை விலை)