மாருதி சுசூகி ஸ்விப்ட் காரின் புதிய DLX வேரியண்டில் கூடுதல் வசதிகளுடன் ரூ.4.54 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி ஸ்விப்ட் பேஸ் வேரியண்டான LXi மற்றும் LDi வேரியண்ட்களில் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலே மாருதி ஸ்விஃப்ட் DLX ஆகும்.
மாருதி ஸ்விஃப்ட் VXi மற்றும் VDi வேரியண்டுகளுக்கு இணையான வசதிகளுடன் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள DLX வேரியண்டில் இடம்பெற்றுள்ள வசதிகள் 2 டின் ஆடியோ சிஸ்டம் பூளூடூத் இணைப்புடன் , முன்பக்ககதவுகளில் ஸ்பீக்கர்கள் , இரு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் , எரிபொருள் சிக்கனம் போன்ற தகவலை வழங்கும் தகவல் அமைப்பு , சென்ட்ரல் லாக்கிங் , பாடி வண்ணத்தில் பின்புறம் பார்க்கும் கண்ணாடி மற்றும் கதவு கைப்பிடிகள் என பல வசதிகளை பெற்று பேஸ்வேரியண்டுகளுக்கு இணையான விலையை விட குறைவாக கிடைக்கின்றது.
இஞ்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.2லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின் 84 PS ஆற்றல் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும். 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் 75 PS ஆற்றல் மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தும்.இரு இஞ்ஜின் ஆப்ஷனிலும் 5 வேக மெனுவல் டீசல் இஞ்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.
மாருதி ஸ்விப்ட் DLX சிறப்பு எடிசன் விலை ரூ. 4.54 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )